அனைவரையும் வாழ வைக்க வருக புத்தாண்டே

புத்தாண்டு வருகின்றது
புது உணர்வு பிறக்கின்றது
புதைத்து வைத்த ஆசைக்கெல்லாம்
புத்துயிர் கிடைக்கின்றது..

உயிர் பறிக்கும் எண்ணம் மாற்றி
உயிர்காக்க உறுதி பூண்டு
உத்தம புத்தாண்டு பூமி வர
உள்மனது அழைக்கின்றது.

பணம் மட்டும் வாழ்க்கையல்ல
பந்த பாசம் வேண்டும் என்று
பறைசாற்றி புரியவைக்க
பணிவான புத்தாண்டை பாவி உள்ளம்
கேட்கின்றது ..

இழந்தவற்றை எடுக்க முடியாத போது
இருப்பவற்றை எடுத்து
இன்னல் கொடுக்காமல் இருக்க
இறையருளோடு
இருள் நீக்கி ஒளி கொடுக்க
இப்புத்தாண்டு சரி
ஏழைக்காக பிறக்க
இன்முகம் காட்டி வரவேற்குது
என் மனம் .

வருக புத்தாண்டே
வாழ வைத்திடு அனைவரையும்
வஞ்சம் இல்லா நெஞ்சத்தோடு
வரவேற்கின்றேன் உன்னை நானும்......

எழுதியவர் : கயல்விழி (31-Dec-14, 10:30 am)
பார்வை : 271

மேலே