2015 வசந்தமாய் வாழ்வோம் வா

என்னுடன் நீ மட்டும்
குடி இருந்தாய் ஓராண்டு
என்னுடன் புதியதாய்
குடி புகுந்தாய் புத்தாண்டு..
குடி இருந்த காலத்தில்
குறை இருப்பின் மன்னித்து விடு
புதியதாய் குடி வரும்
குல மகளே வாழ்த்தி விடு.
வருக வருகவே 2015
வாழ்த்தி வரவேற்கிறேன்
உன்னுடன் வாழத்தான்
வசந்தமாய் வாழ்வோம் வா.