புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்..பிறந்தது புத்தாண்டு...!

ஏற்றமிறக்கம் இரண்டரகலந்து
எளிதில்சென்றா யென்னைவிட்டு
வழியும்வலியும் வாழ்வெனசொல்லி
வரமதைதந்து வயதடைந்தாயோ..!

அறிந்துமறந்தும் தவறைநினைத்து
அகக்கண்திறக்க உணர்ந்தேனின்று..
விழுந்தெழுந்து விடிகிறமுன்னே
வேண்டுமுறவென தேடிவந்தேன்..!

சொந்தம்பந்தம் கூடிடயின்று
சொகுசாய்தந்தாய் புதியதோராண்டு
எண்ணம்வண்ண மெல்லாமின்று
திண்ணமாக பிறந்ததோராண்டு..!

பல்லும்சொல்லும் முத்தெனமலர
பரிசம்போட வந்ததோராண்டு..
பாசம்நேசம் பசியெங்கும்மறைய
பாடம்சொல்ல பிறந்ததோராண்டு..!

எல்லையில்லை எதற்க்குமென்று
ஏணிப்படிகளா யழைக்குமாண்டு
காலைமாலை கதிரவன்போலே
கடமையிலேற்றம் காணுமாண்டு..!

விருந்துமருந்தும் வீட்டுக்குவீடு
விழாவெனமாற பிறந்திட்டாண்டு
கொஞ்சிகெஞ்சும் குழந்தைகளோடு
குதூகலமாக குடியேறுமாண்டு ...!

வீரமீரம் இணைந்துமனதினில்
வெற்றிவாகை சூடுமோராண்டு..
அக்கம்பக்கம் அரவணைப்போடு
அழைப்பிதழோ டழைக்குமாண்டு..!

சட்டதிட்ட சாதிகளெல்லாம்
சரிந்துவிழவே விரட்டிடுமாண்டு..
பட்டிதொட்டி பட்டணமெல்லாம்
பாடியாடும் புதியதோராண்டு..!

இல்லமுள்ளம் எல்லாம்தங்கும்
இன்பமென்னும் இன்முகத்தோடு
கண்கள்கைக ளொருமுகம்வைத்து
கடவுளைத்தேட வழிவிடுமாண்டு..!

புனிதமனிதம் மான்பெனகொண்டு
புண்ணியம்தேட துடித்திடுமாண்டு
மண்ணும்பொன்னு மறந்திடநீயும்
மனிதத்தைதேட மலர்ந்ததோராண்டு.. !

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (31-Dec-14, 11:03 am)
பார்வை : 87
மேலே