அவள் போகிறாளே-தேவி

அவள் ஒரு அழகி!
என்னோடு கைபிடித்து
365 நாள் கூடவே வந்தாள்.

கண் விழிக்கையிலும் அவள் தான்.
கண்மூடயிலும் அவள் தான்.

மெல்ல மெல்ல மெலிந்தாள்.
நாள் தோறும் நலிந்தாள்.

இதோ என்னை விட்டு
இன்று போகின்றாள் .

எனக்கு இன்னொரு தோழியை
அறிமுகம் செய்வித்து
இனிதே விடை பெறுகிறாள்.

பிரியா விடைகொடுத்தே
நிற்கின்றேன்.

புது தோழியை
வரவேற்க காத்திருக்கிறேன்.

வருக , வருக
வருக, வருக

2015

தள நட்புகள் அனைவருக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (31-Dec-14, 10:07 am)
பார்வை : 111

மேலே