புத்தாண்டில் விதைத்திடுவோம்

அன்பென்னும் விதை ஊண்டிரிடுவோம்
ஆசை என்னும் முளை முளைக்க செய்வோம்
இனிமையாய் வாழ்ந்திட உரம் சேர்ப்போம்
ஈடு இணை இல்லாமல் நாம் வாழ்த்திட
உலகமே திரும்பி பார்த்திட
ஊர் மக்களை அரவணைத்து
எல்லாம் ஒன்று குடி
ஏற்றத்துடன் என்றும் வாழ்ந்திட
ஐயம் இல்லா வாழ்க்கை என்று
ஒற்றுமையாய் நாம் கை சேர்த்து
ஓம் என்ற நாமத்துடன்
ஔவையார் காட்டிய வழியில்
ஃ என்ற வடிவிலே வருகின்ற
புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்கிட
வரும் 2015ல் விதைத்திடுவோம்
நல்ல வித்துகளை...எண்ணங்களாக....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (31-Dec-14, 9:58 am)
பார்வை : 74

மேலே