நாளை முதல் நீ வேண்டும்

என்னை விட்டு அவள்
போய் விட்டாள்
என்னிடம் நீ புதியதாய்
வந்து விட்டாய்.

அவள் கொடுத்த
சந்தோஷத்தை விட
நீ கொடுக்க வேண்டும்
சந்தோசம் அவளை விட.

நான் எதிர் பார்த்து
காத்திருக்கிறேன் நாளை முதல்
தந்து விடு உன்னை நீ
தயாராக இருக்கிறேன் உனக்காக நான்.

புது வருடமாய்
புது மனைவியாய்
புது சுகமாய்
நிரந்தரமாய் வா...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (31-Dec-14, 12:43 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 57

மேலே