முயற்சி - உதயா
எனது பெயர் உதயா. நான் கல்லூரி முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டிருக்கிறேன்
.எனது வீட்டுக்கு அருகாமையில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது.
அந்த பள்ளிகூடத்துக்கு எதிரே ஒரு டீ கடை உள்ளது. நான் தினமும் அங்கே தான்
டீ குடிப்பேன். அந்த பள்ளி கூடத்துக்கு முன்னாடி ஒரு பிச்சைக்காரன் தினமும் பிச்சையெடுப்பான்.
அந்த பிச்சைக்காரனை தினமும் அந்த பள்ளி மாணவர்கள் பார்த்துகிட்டே போவாங்க. ஒரு நாள்
அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடமுள்ள பணத்தை திரட்டி அந்த
பிச்சைக்காரனுக்கு ஒரு சின்ன கடையை வச்சி கொடுத்தாங்க. ஒரு பிச்சைக்காரனை சிறுதொழில்
வியாபாரியாக மாத்துன அந்த பள்ளி மாணவர்களை கண்டு சற்று வியந்து போனேன். அந்த
சிறுவர்களின் செயலை கண்டு வருங்கால இந்தியாவில் பிச்சைக்காரனின் எண்ணிக்கை
குறைந்துவிடும் என் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்தப்பின்
மறு நாளே வேலை தேடு சென்றேன் வேலையும் கிடைத்துவிட்டது . நானும் அந்த
சிறுவர்களை போலவே என்னால் முடிந்த உதவியை பிறர்க்கு செய்கிறேன். நீங்களும்
முயற்சி செய்து பாருங்களேன். வருங்காலா வளமான இந்தியாவை உருவாக்கலாம்.............

