கல்லூரி வாசல் மாணவர்களுக்கு சமர்ப்பணம்

ஆயிரம் கனவு இருந்தாலும்
லட்சங்களை கொட்டி இந்த
வாசல்களை தொட முடியும் !

ஏழ்மை கொண்டவன் எண்ணுவதை விட
நல்ல மதிப்பெண் கொண்டே தொடலாம் !

பணம் இருந்தால் வாசல்கள் திறந்தே இருக்கும்
மனிதர்கள் இங்கே மதிக்கபடுவதில்லை -மாறாக
மதிப்பீடு செய்யபடுகிறார்கள் !

வருடங்கள் இந்த வாசலுக்கு வரவுகள் தான்
மனதில் சுமைகளுடன் அங்கே பெற்றோர்கள் !

நல்ல அறிவு சுமைகளோடு பட்டம் பெற்று
கடந்து வா கல்லூரி வாசலை ...............

பெற்றோர்களின் ஆசை சுமைகளை
இறக்கி வை !

இனி வெற்றிதான் உன் கனவு வாசல் !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 4:04 am)
பார்வை : 496

மேலே