கவிதை மலரும்

தேன் சிந்தும்
-----தென்றலில் ஆடும் மலர்களில்
தேனமுது சிந்தும்
-------வான் தொட்ட நிலவொளியில்
புன்னகை தொட்ட உன்னிதழ்களில்
------பூ மலர் விரியும்
புதுமை தொட்ட என் வரிகளில்
-----உன் கவிதை மலரும்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-15, 11:13 pm)
Tanglish : kavithai malarum
பார்வை : 124

மேலே