பேசிப் பார்ப்போம் ஒரு முறை - இராஜ்குமார்
பேசிப் பார்ப்போம் ஒரு முறை
==========================
உந்தன் நினைவால்
நிஜத்தை இழந்தேன்
வருகை தொலைய
விழியை இழந்தேன்
இரத்தம் உறைய
இதயம் இழந்தேன்
நித்தம் நின்றே
எண்ணம் இழந்தேன்
கோபம் மறைய
உரிமை இழந்தேன்
இரசனை குறைய
என்னை இழந்தேன்
காதல் மறைந்து
உன்னை இழக்கும் முன் ...
பெண்ணே ...
ஒரு முறை வா
உன் பெற்றோரிடம்
பேசிப் பார்ப்போம் ...
- இராஜ்குமார்