வயதான ஓர் குழந்தை

வயதான ஓர் குழந்தை
வாலிப வயதில் உழைத்து...!
தன் மகனுக்காய் தன் இன்பங்களை தொலைத்து
அவன் அழுதால் தான் அழுது
தன் மகன் சிரிப்பில் தான் மகிழ்ந்து
தன் மகன் கட்டிலில் உறங்குவதற்கு தன் உறக்கம் தொலைத்து
தன் மகன் உணவருந்த தான் பட்டினி கிடந்தது

அவன் ஒருவனுக்காய்
தன் சந்தோசம்
தன் கனவுகள்
தன் ஏக்கங்கள் அனைத்தையும் துறந்து

இன்று அவன் சந்தோசத்திற்காக மட்டுமே
முதியோர் இல்ல வாசலில்......
தன் மகனின் வரவிக்காக காத்திருக்கும்
வயதான ஓர் குழந்தையின் அழுகுரல் இது....!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (2-Jan-15, 7:48 pm)
பார்வை : 118

மேலே