கண்ணீர் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
வார்த்தைகள் வர
மறுக்கும் போது
வந்து விடும் இது
சோகத்திற்கு மட்டும்
சொந்தமில்லை இது !!!
கன்னப் பரப்பளவில்
கழன்று விழும்
கண்ணீர் தான் அது !!!
உணர்ச்சிகளின் உச்சத்தில்
உடனே உருவாகி விடும்
கணநேரத்தில் கண்களுக்குள்
கருவாகி விடும் !!!
வேதனையின் வெளிச்சம் கண்ணீர்
காதலில் ரகசியம் கண்ணீர்
பெண்களின் பலம் கண்ணீர் !!!
கட்டியணைத்து அழும் போது
அன்பின் வெளிப்பாடு
கடவுளிடம் அழும் போது
பக்தியின் வெளிப்பாடு
வெற்றியில் அழும் போது
முயற்சியின் வெளிப்பாடு
தோல்வியில் அழும் போது
விரக்தியின் வெளிப்பாடு
பிரிந்தவர் சேருகையில்
களிப்பின் வெளிப்பாடு
மொத்தத்தில் கண்ணீர்
உணர்ச்சிகளின் வெளிப்பாடு !!!
தாகமென்றால் தண்ணீர் அருந்து
சோகமென்றால் கண்ணீர் மருந்து !!!
கண்ணீர் உப்பு தான்
கரையாத உப்பு
மற்றவர் மனதை
கரைக்கும் உப்பு !!!
விழிகள் அழுதாலும்
அதைத் துடைக்கின்ற
விரல்களுக்கோ
விருதுகள் வழங்கலாம் !!!
அந்த விரல்களைத் தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
கண்களில் நீரோடு நான்
வாடிக் கொண்டிருக்கிறேன் !!!
மனதிற்குள் அழுபவர்களுக்கு
மௌனமாய் அழுபவர்களுக்கு
எந்த விரல்களை எடுத்து
நான் துடைக்க !!!