சர்க்கரைக் கதை 2

கூடிவிட்ட ஒருபொருளின் நிலையதனை
கூப்பாடிட்டு நோயென்று பயம்கூட்டி
கொள்ளையிட கூட்டம்பல கடைவிரிக்க
கூடும்சனம் கூப்பாடிட்டுக் கொலைபயத்தில்...
என்னதான் நடக்கிறது இயக்கமதின் அடிப்படையில்....??
சர்க்கரை நிலை இரண்டு வகை...
சார்ந்தநிலை..(IDDM) சாரா நிலை (NIDDM)..
இன்சுலின் இல்லாமை முதல்நிலை..
இன்சுலினால் இயலாமை இரண்டாம் நிலை..
லாங்கர்ஹான் திட்டுகளின் பீட்டா செல்
நாளத்தின் நாதமதை நிறுத்திவிட்டால்
இன்சுலினின் தாளநயம் தீர்ந்துபோகும்
இல்லாத இன்சுலினால் ஏறிப்போகும்..
கிளைகாலிசிஸ் உடைக்காத சர்க்கரையும்..
இரண்டாம்நிலை என்னவென்று எடுத்துவைக்க
துணைக்கழைத்தேன் கொழுப்பென்னும் கொலஸ்டீராலை
இயக்குநீரின் வேகத்திற்கு வேலிகட்டி
இயங்கவிடா திசுக்கள்தனில் மழுங்கலேற்றும்
இந்நிரண்டாம்நிலை பெரும்பான்மை இந்தியாவில்....