நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015
தேன் சிந்தும் உன் மொழியில்
நீர் சிந்தியது என் நாவில்
இனிக்க பேசியே என்னை
இணைத்து விட்டாய் நீ.
இன்ப தமிழ் உன் நாவில்
இனிப்பாய் இருந்தது என்
இதய துடிப்போடு
இப்படியே பேசிடு நீ.
தமிழுக்கு உயிர் கொடுத்து
தரணி எங்கும் ஒலித்திடவே
தரமாய் தமிழ் மொழியை
தவறாமல் பேசிடு நீ.
நாளைய தமிழ் நம்மோடு
நலமாய் நலன் பெற
நாடு போற்றிட நாம்
தமிழ் மொழியை பேசிடலாம்.
தமிழருக்கு என்று ஒரு
தனி மரியாதை இருக்கிறதே.
அதை கனிவாய் பேசி நாம்
கற்கண்டாய் இனித்திடுவோம்.
நாளைய தமிழும் தமிழரும்
நம்பிக்கையோடு மொழியை
ஒன்று பட்டு ஒற்றுமையாய்
வாழ்ந்திடலாமே.வாழ்க தமிழ்.
எ.மன்சூர் அலி
சௌதி அரேபியா.ரியாத்.
00966-509150390.
asali@balsharafgroup.கம
whatsapp : 00966-509150390.