வறுமை எனும் நஞ்சு, பிஞ்சு வேர்களிலே,,,

ஒவ்வொரு நாளும் விடியலாம்,
பூமிக்கு சூரியன் வரவால்;
பிஞ்சு உள்ளம் தவிக்குது
தினம் தினம் - இங்கே
பட்டினி இருட்டினிலே!
வள்ளல்கள் பல வாழ்ந்திட்ட
மண் மீதிலே - இன்று
மண் தின்று உயிர் காக்குது
ஓர் பிறவி!
பொய் புளுகி பிழைக்கும்
மகான்களுக்கே - பொன்
ஆடை போர்த்தும் பூமியது,
கபடறியா பிஞ்சுக்கில்லை - உடல்
மறைத்திட நூலாடையேனும்!
மடிக் கணணி கேட்கும்
பாலகன்கள் ஏராளம் -நவ யுகத்திலே
இந்த மழலைகோ இல்லை,
ஓர் மடி , உயிர் காத்திடவே!