மண் வாசனை

இறுதியாக
ஒருமுறை..
குனிந்து தன்
வயலின் வறண்ட மண்ணை
கையில் எடுத்தவன்
கண்களில்
கண்ணீர்..
உயிரை மண்ணில் விட்டு
உடல் மட்டும்
அயலூருக்கு
நகருகிறது..
கூலி வேலைக்கு ..!
.. திரும்பும் ஒரு நாள்
சொந்த மண்ணுக்கு..
வெற்றியோடு..
மண்ணின் வாசனை நாடி!..
உயிரும் உடலும் இணைந்திடும்
அன்று..
நதிகளின் இணைப்பிற்குப் பிறகு!