• நாளைய தமிழும் தமிழரும் -பொங்கல் கவிதைப் போட்டி -2015

• நாளைய தமிழும் தமிழரும் !


நயவஞ்சக நரிக்கூட்டம்
நாளைவரும் காளனென ;
நாற்புறமும் விதைத்தடி -
நல்லதொரு தமிழினத்தை..!

தஞ்சம்புகும் மண்ணில்கூட
தமிழனுக்கு உரிமையில்லை ;
தமிழன்னை மகனென்றால் -
தண்ணீரு மினியில்லை..!

கண்டபூவை கதம்பமென்று
கடவுளுக்கு சாத்திவிட்டு;
கல்லைபோல தமிழினத்தை -
காட்சியாக்கும் வரும்காலம்..!

கேளிக்கை அரசியிலும்
கேவலமாம் தமிழென்று ;
குருதியிலே கொப்பளித்து -
கொக்கரிக்கு மொருநாளை ,

தட்டிகேட்க யாருமில்லை ;
தாய்மொழிக்கு நாதியில்லை ;
பிறமொழியின் மோகத்திலே -
பிழையாகும் தமிழன்னை ..!

இதிகாசம் மறைந்திடுமோ ?
இலக்கணமே யில்லாமல்..!
எதற்க்குயினி பொருமையென
எழுந்துவிடென் தமிழினமே..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (5-Jan-15, 11:43 am)
பார்வை : 283

மேலே