இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி -2015

• இப்படி நாம் காதலிப்போம் !

நாதா! நாதி! காதல்முடிந்து
நாகரீகக் காதல்வளர்ந்து
நவீனயுகக் காதலெல்லாம்
நாடியின்றி துடிக்கும்போது..!

என்காதல் எனக்குள்ளே
என்றுமிளமை யென்றதடி
உள்ளமெனும் உண்மையதில்
உயிரைத்தாங்கி நின்றபடி..!

அள்ளிவிடும் அரளிவிதை
அங்கமெலாம் விடம்போல
அழகென்னும் குடும்பத்தை
ஆழம்பார்க்க அளவிடுவான்..!

விஞ்சுகின்ற என்னுணர்வால்
விடையாக எழுதிவைத்தேன்
அளவென்றக் குடும்பத்தில்
அழகொன்றும் பஞ்சமில்லை..!

அரண்மனையா மென்வீட்டின்
அழகுராணி அவளன்றால்
அதைமீறும் அழகுக்கு
அடையாளம் பிள்ளைகளே..!

இல்லறத்தை காதலென்று
இப்படிநாம் காதலித்தால்
இளரத்தம் உறைவதில்லை
இமயமென்றும் தூரமில்லை..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (5-Jan-15, 6:50 pm)
பார்வை : 103

மேலே