உன் நிழலில் நான்
நான் கர்பத்தில் இருக்கும்
போதே காதலித்தேன் உன்னை
அங்கே என்னால் கவிதை
எழுத முடியவில்லை..
இங்கே வந்த பிறகு
கவிதை எழுத முயற்ச்சித்தேன்
ஆனால் வார்த்தைகள் எனக்கு
வர வில்லை.
இப்போது எழுதி பார்க்கிறேன்
கவிதை வருகிறதா?. என்று
வந்தால் நான் உனக்கு
சமர்பிக்கிறேன்.
அம்மா என்பவள் அன்பின் ஊற்று
அவள் சொல்வது எல்லாம்
என் சுவாச காற்று.
அவளின் அறிவுரையே.
என்னை வெளிச்சம் போட்டு.
வெற்றி நடையும் போட்டு
வாழ்கிறேன் அவளின்
நிழலில் நான் இன்று.