கேட்கப்பட்ட கேள்வி
உறங்கிக் கொள்கிறேன்.
உயிர் எனை உறங்க
வைக்கும் முன்.......
அமைதியின் அடித்தளத்தில்
அமர்ந்திருக்கிறேன்!
அடக்கிக்கொண்டேன்
ஆசைகளை
ஆறாத பாசங்களினால்.
வார்த்தைகளின் தழும்பாய்
வஞ்சித்தவர்களின் வாக்கு.
வாழ்வது ஏன்
என்று புரியாமல்
தொலைந்தேன் தினமும்....
அழுகையினால் ஆர்ப்பரித்த
விழிகளை
அடக்கி ஆண்டது வறுமை..
எனை முடக்கி போட்டு
மாண்டது என் நிலைமை..
சிறுக சிறுக
சிரிப்பிழந்து
பெருகிப்போனது சுவாசம்.....
கோரப்பசிக்கு
ஈரக்காற்று
உட்புகுந்து போட்டதடா வேசம்.....
அதிகாலைப் பொழுதுகளில்
என்னுள்ளும்
விடியாத இரவுகள்...
விதியென்ன விதியென்று
வாழ்வை
முழம் போட வருமா உறவுகள்...!