காதல் இல்லா காதலி
மான் கொம்பின்
வளர் கிளைகள் ,
கோடாங்கியின்
முட்டை குளியல் ,
யானையின்
உள்ளங்கால் ,
தெரு பொறுக்கும்
தண்டல்காரன் ,
ரசிக தெரிய
மது மயங்கிகள்,
ஊமையாகும்
ஊமை வாத்தியார் ,
பாரி கொடுத்த
கொடையின் பின் பாதி ,
சின்னாபின்னமாகும்
விந்து கூட்டம்,
ரெக்கை இருந்தும்
பரக்க முடியா காத்தாடி,
காதல் இல்லா
காதலி ,
மறந்து மறந்து
நினைக்கிறது நினைவு ,
மை தீர்ந்த
பேனா .......