உன் சுவாச காற்று மட்டும் 555

பெண்ணே...
தினம் விண்ணில்
நிமிடத்திற்கு நிமிடம்...
வெண்மேகம் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது...
உன் நினைவுகளும்
என்னில் ஓயாமல்...
சந்தோசமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
நிமிடத்திற்கு நிமிடம்...
நான் சுவாசிக்க
தென்றல் தேவை இல்லை...
இளவம் பஞ்சான
என் இதயத்திற்கு...
காற்று தேவை
இல்லையடி...
நீ விடும் மூச்சு காற்று
மட்டும் போதும்...
நான் உயிர்வாழ
மண்ணில்...
தென்றலோடு நான் கலக்கும்
நாட்கள் வரை மட்டும்.....