உணவு விடுதியில் ஒரு அறிவாளி
ஒரு நாள் ஒருவர் ஒரு உணவு விடுதியில் நுழைந்து, நன்றாக உணவு அருந்தினார். உணவு அருந்திய பின்னர், சாப்பிட்டதற்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, சர்வரிடம் இவ்வாறு கூறினார்:
சாப்பிட்டவர்: "தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் சிறிது மிளகு சேர்த்து அருந்தினால் உடம்புக்கு மிக நல்லது.."
சர்வர்: "அது சரி.. இதெல்லாம் எதற்கு இப்போது என்னிடம் சொல்லுகிறீர்கள்?"
சாப்பிட்டவர்: "இது என்ன கேள்வி.. சாப்பிட்ட பிறகு சர்வருக்கு எதாவது "டிப்ஸ்" கொடுக்க வேண்டுமல்லவா.."
சர்வர்: !!!!!!!!!!!!!!!!