காதல் கிறுக்கல்4

சுற்றும் பூமி நின்றாலும் உன் கரம்
பற்றி வாழ்ந்திடத் தோன்றுதடி
வீசும் காற்று ஓய்ந்தாலும் உன்
சுவாசம் மட்டும் போதுமடி!
பட்டில் மஞ்சம் அமைத்தாலும் உன்
மடி சாயும் சுகமில்லை
கட்டில் இன்பம் கடந்தாலும் எனைத்
தேடும் பார்வைக் கிணையில்லை!
விழியோரப் புன்னகையில் என்
மேனி யெங்கும் சிலிர்க்குதடி
சுழிக்கும் பூவிதழினிலே என்
ஆவி மொத்தம் அடங்குதடி!
இதயம் எனக்காய் துடிப்பது போல் நின்
நினைவில் நித்தம் துடிக்கின்றேன்
மீண்டும் ஜனனம் எடுத்தேனும் உனைத்
தீண்டும் இன்பம் பெற்றிடுவேன்!
அன்பாய் மார்பில் நான் சாய என்
ஆயுள் முடிந்திடத் தோன்றுதடி
அரணாய் உந்தன் கரம் இருக்க வந்த
மரணம் கூட மறிக்குதடி!