அம்மா

உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
உலகிற்கு வழிகொடுத்து தன்னைவிட உயிராய்
என்னோடு உறவாடும் அவளை-நான்
'தெய்வம்' என்பேனா!!

பத்துத்திங்கள் சுமந்து
பலநாள் தூக்கம் இழந்து
பத்தியங்கள் பல ஏற்ற அவளை-நான்
'என்னுயிர்' என்பேனா!!

நிலாவைக்காட்டி
பால்சோறூட்டி என்னைப்
பார்த்துப்பார்த்து ரசித்த அவளை-நான்
'பாசக்காரி' என்பேனா!!

பலநேரங்களில்
பக்குவமாய் என்னைப் பண்படுத்தி
பரிசுகள் பலபெறச்செய்த அவளை-நான்
'ஆசான்' என்பேனா!!

பஞ்சுமெத்தையென
தன்நெஞ்சில் என்னைசுமந்து
நான் பட்டம்பல பெறவேண்டும் என
துடிக்கும் அவளை-நான்
ஒற்றைச்சொல்லில் சொன்னால்
அவள் என் ''அம்மா''......

எழுதியவர் : சுடர்விழி (8-Jan-15, 3:35 pm)
பார்வை : 323

மேலே