இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி - 2015
உடலுக்குள் உயிராய்
கண்ணுக்குள் கருவிழியாய்
முகம் காட்டும்
கண்ணாடியாய்
உன் அன்பிற்கு அடிமையாய்
உனக்கு உரிமையை
எனக்கு நீயென
உனக்கு நானென
நாமிருப்போம்
புன்னகையை சொந்தமாக்கி
பூமியெல்லாம் பூத்து குலுங்கும்
புன்னகை பூக்களாக்குவோம்
வானவில்லுக்கு வண்ணங்களாய்
நம் அன்பை தீட்டுவோம்
பொன் இனிது பொருள் இனிது
என்போருக்கு நம்
காதல் இனிதை கற்று கொடுப்போம்
சாதி பெரிது மதம் பெரிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்
யாழ் இனிது குழல் இனிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்
கண்ணை காதலிக்கும்
கருவிழியாக
கையை காதலிக்கும்
கைரேகையாக
நாம் காதலிப்போம்
தமிழருக்கு தமிழாக
உயிருக்கு நிகராக
காதலுக்கு உண்மையாக
காதலிக்க நாமிருவரும்
கருவறையில் நாம் வளர்வோம்
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது
பெயர் :இன்பகுமார் .மு
இடம் : வேலூர் மாவட்டம் , சென்னங்குப்பம் .
இந்தியா, தமிழ்நாடு
அலைபேசி : 9597128761