இந்த பொல்லாத காதல் ஏதற்கு 555

என்னவளே...
சந்தோசமாக நான்
சிறகடித்த கல்லூரி பருவம்...
துன்பங்களை காணாத
வாழ்க்கையின்...
சில அனுபவங்கள்
சில வாழ்க்கை சிதறல்கள்...
கல்லூரி தந்த
வாழ்க்கை அனுபவம்...
காதலும்,கல்லறையும்...
காதலையும் வாங்கவில்லை
உன்னிடம்...
கல்லறைக்கும் செல்லவில்லை
உன்னால்...
தோல் கொடுத்த
தோழனை மறந்தேன்...
உயிர் கொடுத்த
உறவுகளை மறந்தேன்...
பிறந்து வளர்ந்த
மண்ணையும் மறந்தேன்...
நீ என்ன செய்தாய்
என்ன ஆனது எனக்கு...
உன்னை கண்ட
நொடிமுதல்...
என்னையும்
மறந்து நிற்கிறேன்...
திசைகள் ஏதுமின்றி...
உன் மேனி பட்ட பனித்துளி
என்னில் விழுந்தாலாவது...
நான் சுய
நினைவடைவேன்...
என்னை மறக்க வைத்து
உன்னை நினைக்க வைத்தவளே...
உன் கையால் வேண்டும்
துளி நீர்...
நான் உயிர் வாழ.....