காதல் கவிஞன்
கன்னக்குழியில் தூண்டில் போட்டு
விண்மீன்களை பிடிக்கவா
இமையின் விழிம்பில் நின்று கொண்டு
சர்க்கஸ் வித்தைகள் பழகவா
காற்றில் பறக்கும் உன் கேசம் போல
அலைக்கழிந்து நான் தவிக்கிறேன்
காதுமடலில் ஜிமிக்கி மேலே மேடை
போட்டு ஊர்பூரா அதை அறிவிக்கிறேன்
உன் உதட்டு சாயம் பூசும் அழகை கண்டு
பல நூறு கவிதைதான் பாடவா
நான் உண்டு என்வேலை உண்டு என்று
உந்தன் மேக்கப் மேனாக ஆகவா