23 காதலிக்காதே
சொந்தக் காலில் நிற்கு முன்பு காதலிக்காதே! - வெறும்
*** சுகத்திற் காக எவளை யும்நீ காதலிக்காதே!
வந்த காதல் சரியா தப்பா காதலிக்காதே! - உன்
*** வாழ்க்கை யைநீ பணயம் வைத்துக் காதலிக்காதே!
சிரித்துப் பேசு கின்றாள் என்று காதலிக்காதே! - அவள்
*** சிவப்புத் தோலுக் காக வழிந்து காதலிக்காதே!
பொருத்த மின்றி அர்த்த மின்றிக் காதலிக்காதே! - உன்
*** புத்தி யைநீ அடகு வைத்துக் காதலிக்காதே!
அன்னை தந்தை எதிர்ப்பார் என்றால் காதலிக்காதே! - உனக்கு
*** அக்காள் தங்கை பொறுப்பி ருந்தால் காதலிக்காதே!
உன்னை மட்டும் பெரிதாய் எண்ணிக் காதலிக்காதே! - என்றும்
*** உன்னை முட்டாள் ஆக்கும் பெண்ணை காதலிக்காதே!
வாலி பத்தின் ஜாலிக் காகக் காதலிக்காதே! - நீ
*** வந்து சேரும் பணத்தை எண்ணிக் காதலிக்காதே!
தாலி கட்டும் எண்ணம் இன்றேல் காதலிக்காதே! - நீ
*** தங்கை என்று சொல்லிக் கொண்டே காதலிக்காதே!
எதையும் தாங்கும் இதயம் இன்றேல் காதலிக்காதே! - நீ
*** உதையும் வாங்கும் உடலம் இன்றேல் காதலிக்காதே!
கதைகள் வேறு நிஜங்கள் வேறு காதலிக்காதே! - நான்
*** கண்டிப் பாகச் சொல்லி விட்டேன் காதலிக்காதே!