இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப்போட்டி 2015”

கவர்ச்சியான காதல் வேண்டாம் .....
உணர்ச்சியான காதல் வேண்டாம் ....
உடலை வருத்தும் காதல் வேண்டாம் ....
உறவுகளை துறக்கும் காதல் வேண்டாம் ....
இப்படி நாம் காதலிப்போமானால் .....
உயிரான காதலை உணர்வோம் உயிரே ....!!!

மரபுகளை மதிக்கும் காதல் செய்வோம் ....
கலாச்சாரத்தை மதிக்கும் காதல் செய்வோம் ....
பிறர் மனதை புண் படுத்தாத காதல் செய்வோம் ....
புனிதத்தை புண்படுத்தாத காதல் செய்வோம் ....
இப்படி நாம் காதலிப்போமானால் .....
உயிரான காதலை உணர்வோம் உயிரே ....!!!

உடல்கள் இணைவது காதல் இல்லை ...
உலறிக்கொண்டு பேசுவது காதல் இல்லை ...
உண்மையை மறைப்பது காதல் இல்லை ...
உரிமையை பறிப்பதும் காதல் இல்லை ....
இப்படி நாம் காதலிப்போமானால் .....
உயிரான காதலை உணர்வோம் உயிரே ....!!!

காதல் என்பது அன்பான வாழ்க்கை ....
அன்பானவாழ்க்கையே ஆயுள் வாழ்க்கை ....
இல்லறம் சிறக்க நல்லற காதல் செய்யோம் ....
இருப்பதை கொண்டு சிறப்புற வாழ்வோம் .....
இப்படி நாம் காதலிப்போமானால் .....
உயிரான காதலை உணர்வோம் உயிரே ....!!!

+
எழுதியவர் ;கே இனியவன்
வசிப்பிடம் ; இலங்கை
விலாசம் ; 391 .3/2 அழுத் மாவத்தை கொழும்பு -15
கைபேசி எண் ;0778002376
வயது ;49
இப் படைப்பு என் சொந்த சிந்தனையில் உருபெற்றது என்பதை உறுதிப்படுத்துகிறேன்

எழுதியவர் : கே இனியவன் (8-Jan-15, 9:27 pm)
பார்வை : 117

மேலே