26 பெண் பார்க்கப் போகிறேன்

நிறங்கம்மி யானாலும் பரவா யில்லை!
நெட்டைதான் என்றாலும் பரவா யில்லை!
குறைவேறு இல்லையென்றால் பரவா யில்லை! - நான்
குடும்பந்தான் நடத்தப்போறேன் பரவா யில்லை!

படிப்பதிகம் என்றாலும் பரவா யில்லை!
பணமதிகம் என்றாலும் பரவா யில்லை!
பிடிச்சிருக்கு என்றுசொன்னால் பரவா யில்லை! - நான்
பேசாமல் மணந்திடுவேன் பரவா யில்லை!

ஆண்குரலாய் இருந்தாலும் பரவா யில்லை!
அரும்பி இருந்தாலும் பரவா யில்லை!
வேண்டும் குணமிருந்தால் பரவா யில்லை! - நான்
விரும்பி மணம்முடிப்பேன் பரவா யில்லை!

குண்டாக இருந்தாலும் பரவா யில்லை!
குட்டையாய் இருந்தாலும் பரவா யில்லை!
செண்டாக அவளிருந்தால் பரவா யில்லை! - நான்
வண்டாகச் சுற்றிடுவேன் பரவா யில்லை!

அழகு குறைந்தாலும் பரவா யில்லை!
அணிகலன் குறைந்தாலும் பரவா யில்லை!
பழகும் அழகிருந்தால் பரவா யில்லை! - நான்
பயப்படாமல் கட்டிடுவேன் பரவா யில்லை!

தம்பியில்லை என்றாலும் பரவா யில்லை!
தந்தையில்லை என்றாலும் பரவா யில்லை!
நம்பிஎன்னை ஏற்றுக்கொண்டால் பரவா யில்லை! - நான்
நன்றாக வாழவைப்பேன் பரவாயில்லை!
***********************************************************************************
தட்டிக் கழிப்பதற்குக் கார ணங்கள்
தயாராக வைத்திருக்கும் ஆண்கள் கூட்டம்
கொட்டிக் கொடுத்துவிட்டால் மனது மாறும்
கொடுமைஎன்று மாறுமோ குமரிப் பெண்ணே?

எழுதியவர் : ராஜமாணிக்கம் (9-Jan-15, 9:19 am)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர்
பார்வை : 71

மேலே