இப்படியும் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி 2015
அன்பே
குலை தந்த வாழையை
குதர்க்கமாய் வெட்டியது
கூடியே நாம் வளர்த்த
குலம் வளர்க்கும் கன்றுகளே . . . .
நாம் நற்று வளர்த்த
நாற்று எல்லாம்
நல்லதொரு மலர்களாக
நான் மட்டும் தனிமையிலே
நாதியற்றுக் கிடக்கின்றேன் . . . .
மழலையின் மலமும் கழுவும்
மகத்துவம் நீ அறிந்ததனால்
மனிதாபிமானம் கொண்டு
மகன் உன்னைப் பக்கம் வைத்து
மனிதருள் கழிவு என்னை
மறைத்திட்டான் முதியோர் இல்லம் . . . .
நீயிங்கு நலம் கண்ணே
நானங்கு நலமா பெண்ணே . . . .
இருபதில் நாமும் அன்று
இனிதாக காதல் செய்து
அரும்புகள் மலரச் செய்து
முள்ளாகி நம்மைக் குதற
அறுபதிலும் காதலிப்போம்
ஆவி மட்டும் அடங்கும் வரை . . . . .
==================