சாதி ஒழி,மதம் அழி பொங்கல் கவிதை போட்டி 555
சாதி,மதம்...
சாதிகள் இல்லையடி பாப்பா மீசை கவிஞன்
பாடிய வரிகள் இன்னும் செல்லவில்லை
பாப்பாவின் செவிக்குள்...
உலகத்திற்கு நாகரிகத்தை அறிமுகபடுத்தியது
காதல் என்றான் கவிஞன் ஒருவன்...
சாதி மதங்களை காதல்தான்
அழிக்கும் என்றான் இன்னொரு கவிஞன்...
காதலால் நடக்கும் சாதி,
மதவெறி கலவரங்கள்...
காதலால் வீட்டுக்குள்ளே நடக்கும்
கௌரவ கொலைகள்...
நாகரிகம் கண்ட மனிதனென்று
நீ குறைத்து கொண்டு இருப்பது
ஆடைகளை மட்டுமே...
சாதி மதமென்று வெறிபிடித்த
அரக்கர்களை உன் காலில் போட்டு மிதி...
சாதி இரண்டொழிய வேறில்லை
என்ற வார்த்தையையும் அழித்துவிடு...
ஆடவர்களுக்கு நிகராக
பெண்டிர்களும் இன்று...
மனித சாதி என்று
உரக்க சொல்...
அன்புதான் உண்மையான கடவுளென
அன்பே கடவுளெனவும் உரக்க சொல்...
நாகரிகம் என்ற பெயரில் ஆடைகளை
குறைப்பதும் மது அருந்துவதும் நிறுத்திவிட்டு...
சாதி மதம் வெறியர்களை
குறைக்க முயர்ச்சிசெய்...
சாதி மதத்தால் வேறுபட்டு இருக்கும்
தேசத்தை கண்டு கொந்தளிக்க வேண்டாம்...
உன்னையும் உன்னைசுற்றி
உள்ளவர்களின் மனதைவிட்டு அழி...
சாதி மதங்களை நீ அழிக்கும்
அந்தநாள்தான் நீ நாகரிகம் கண்ட மனிதன்...
நாகரிகம் வளர்ந்தாலும் தோற்று
கொண்டுதான் இருப்பாய் சாதி மதத்தால்.....