மெளனக் கதறல்கள்
கரங்களை திருப்பிப் பார்க்கிறேன்...
ரணங்களாகி போன வடுக்கள் தாம்...
ஆனால்
வலிக்கிறது..ஒவ்வொரு கணமும்..
விழாக்கள் கொண்டாடுகிறார்கள்...
கொடியேற்றுகிறார்கள்
சுடரேற்றுகிறார்கள்....மங்களச்சுடராம்...
யாருக்கு தெரியும்????
கால்களின் அடியில்...
அம்மாவோ, அக்காவோ , தங்கையோ, தோழியோ
இல்லை மனைவியின் மானமும் உயிரும் தான்
புதைகுழிகளாக்கப் பட்டிருக்கும் என்று.....
ஈகச் சுடர் ஏற்றி ஏற்றி
புனிதப்பட்டவை நம் கரங்கள்...
விதை குழிகள் விதைத்து...
நிறைந்து போனவை நம் கரங்கள்...
காற்றுக்கு வேலி போட நினைக்கிறார்கள்...
முட்டாள் தனம்... புரிகிறது.. நமக்கு..
ஆனால்..அவர்களோ
சுதந்திரம் தரப்படும் என்கிறார்கள்..
கைகள் விலங்கிடப்பட்டு...
கால்கள் துண்டாடப்பட்டு...
வாய் அடைக்கப்பட்டு....
திறந்த வெளிச் சிறையிலே
நீங்கள் தரப்போகும்
அது யாருக்கு வேண்டும்???
இப்போதே புறப்பட்டு விட்டோம்...
மெளமாய் கதறிக்கொண்டே....
விடியலை தேடி