சாதி ஒழி மதம் அழி சாதி -- பொங்கல் கவிதை போட்டி 2015

சாதி ஒழி மதம் அழி சாதி -- பொங்கல் கவிதை போட்டி 2015

காற்றில் என்ன பேதம்
குழலில் உள்ளது நாதம்
யார் இசைத்தாலும் வரும் கீதம்
இது பிரிவினைக்கு எதிராய் நான் மீட்டிய கீதம் ...

வான் வழியே மழை பொழியுது
ஒரு இனத்துக்காப் பார்த்து
பருகும் தண்ணீரில் இன்னும் ஏனடா தீட்டு...
பெரியார் வளர்கச் சொன்ன பகுத்தறிவை
நீயும் கொஞ்சம் கூட்டு
அப்பொழுது தான் உடையும் சாதி மத பூட்டு ....


மலம் - மண்ணில் பிறந்த எவனுக்கும் வரும்
இது ஒற்றை காலில் தவம் புரியா
இறைவன் கொடுத்த சாகா வரம்....
ஒரு இனம் மட்டும்
தொடர்ச்சியாக அள்ளிக்கொண்டே வரும்
இது எந்த இறைவன் கொடுத்த சாகும் வரம்...

பூணூல் சிலுவை குல்லா
அணிவதால் மூவரும் வேறு வேறு இல்லா
வேண்டுதலை முடித்து வெளியே வந்தால்
அனைவரும் இந்தியர் தானே தோழா....

மூன்று மதமும் சங்கமமாய்
எந்த மண்ணில் வாழுது நிம்மதியாய்
அந்த வாழ்க்கையை தந்தது நம் பாரத தாய் ...
இவள் பெருமையை பார் கொண்டு சேர்ப்போம் ஒற்றுமையாய்...

எழுதியவர் : அருண்வாலி (10-Jan-15, 5:08 pm)
பார்வை : 149

மேலே