முழுமையவள்

கலர்வண்ண காதல்
கரைந்தோடி இன்று
கடல்தேடி போகிறதோ
கண்ணீரா யுருமாறி..!
கருப்புவெள்ளை யென
கருமாதி யழைப்புக்கு
கரைமீ தொருகன்னி
கருமாந்ர மென்றபடி..!
அபசெய மச்சங்கள்
அறிவுரை யெனவாக
வலிகளை யூன்றியபின்
வாழ்வை யறிந்தாளோ..!
குடும்ப வுறுகையிலே
குழியே தானென்று
காய மடைந்தவளாய்
கலங்கி நின்றாளோ..!
தயக்க மில்லாதொரு
தடையை மீறியவள்
மந்த குணமதிலே
மதியை யிழந்தாளோ..!
இனியு மவள்சிரிக்க
இதய மிடரென்று
துணியு மொருமனதை
தாழ்நிலை யென்றபடி
தடுத்து நிறுத்திடவே
தவழு மலைகளதின்
தாகம் நினைத்துவிட
தவறை யுணர்ந்தபடி
ஆசை யெல்லாமே
அடங்கி போகாதென
முடிவை மாற்றியொரு
முழுமை பெண்ணானாள்..!