உன்னை அறிந்தால்
வானத்தில் வட்டமிட
முயல்கள் எண்ணியதில்லை
மீன்கள் மரத்தில் கூடுகட்டியதாய்
சரித்திரம் இல்லை
பறவைகள் நீருக்குள்
குடித்தனம் நடத்தப்போவதில்லை
மாடுகள் முதலைகளை
வேட்டையாட முயன்றதில்லை
ஒவ்வொருவனுக்கும்
ஒவ்வொரு திறமை
அதை உணர்ந்தவனுக்கு
தோல்வி இல்லை
உன்னை நீ அறிந்தால்
உன்னைப்போல் எவனுமில்லை