நாளைய தமிழும் தமிழனும் பொங்கல் கவிதை போட்டி 2015

கவலை படாதே மனமே
தமிழை தாழியில் இட இயலாது
முக நூலில் படத்தை பகிரும் தமிழனுக்கு
உணவு பகிர நேரம் இருக்காது

தமிழின் உருவம் மாறலாம்
அதன் நிறம் மாறாது -தமிழன்
அறிவியல் நுட்பத்தை நுகர்ந்துயிடுவான்
விஞ்ஞானத்தோடு கலந்துவிடுவான்

படிம தமிழ் விஞ்ஞான தமிழாய் மாறியது
இனி அறிவியல் தமிழாய் வான் நோக்கி ஏறும்
நாகரிகம் கொடுத்த தமிழை
நகம்போல் வேட்டுவானோ?

திருக்குறள் ஆட்சி செய்யும் வரை தமிழுக்கு
ஆங்கில சந்தையில் பங்கு உயர்ந்து இருக்கும்
வியர்வையை விலையென நினைத்தவன்
விதியென நினைப்பான் நாளைய தமிழன்

கவிஞர்கள் இருக்கும் வரை வரும் வரை
தமழ் நைல் நதியாய் பெருக்குஎடுக்கும்
தமிழன் வாய் கொப்பளிப்பது கூட
ஆங்கிலத்தில் ஏப்பம் கூட ஆங்கிலத்தில்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (11-Jan-15, 9:42 am)
பார்வை : 84

மேலே