இருபத்தியொன்றில்?
ஐ.நா வின் வரவேற்பறையில்
அருந்தமிழின் வாசகம்
"யாதும் ஊரே ; யாவரும் கேளிர் "
இரக்கத்திற்கான எம்மொழி விளம்பலில்
இருபதாம் நூற்றாண்டு
எழுதிவைத்த சிறப்பினை
இப்போதெல்லாம் இரத்தத்தினால் எழுதி
இலங்கையின் யுத்தத்தால் மெழுகி
மகாவம்சத்தின் மமதையை போற்றி
மாற்றலாம் யோசனை கூறுகின்றாரே
"யாதும் ஊரே; யாவரும் கேட்பீர் "
எங்கும் தமிழினம் இல்லாது ஒழிப்பீர்
சிங்களம் மட்டுமே செம்மொழியென்று
செப்பினால் உண்டு இரக்கத்தை தின்று
வருக வருக வரவேற்பரையோ
வழிகாட்டி சொல்லுதான் இலங்கைக்கு செல்லுங்கள் !