காலம் மாறும்
பாஞ்சாலி காலம் வரும்
கால் நூற்றாண்டு கழியட்டும்
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்
இமாலயச் சரிவில்
அடக்கி ஆளும் பாஞ்சாலிகளும் தீஞ்சாலிகளும்
வரதட்சணைக் கொடுமை செய்யும்
காலமும் வரலாம்
கால் நூற்றாண்டு காத்திருங்கள்!
இன்றைய கொடுமைக்கெல்லாம்
ஆண்களைக் குறை சொல்லுவோர்
பழி வாங்கும் காலம் வரலாம்
ஆண்களே ஆண்குழந்தைகளே காத்திருங்கள்
நம்மில் சிலர் அதைப் பார்க்கமுடியாது
மொத்து வாங்கி கண்ணீர்சிந்தப் போகின்றவர்க்கே இந்த எச்சரிக்கை.