கார்த்திகைப் பூக்கள்
தமிழ் மண்ணில்
வேரோடும்
தருணம் பார்த்து
முளை கொள்ளும்.
வேரோடு அழித்தாலும்
அடி மண்ணில்
விதை உறங்கும்.
கார்த்திகை மாதம்
மண் கிழித்து
தலை நிமிர்ந்தால்
பகையும்
கிலி கொள்ளும்.
அழிக்கப்படும் இனத்தின்
அக்கினி சாட்சி
இந்த
காந்தள் மலர்கள்.
(இலங்கையின் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மட்டும் பூக்கும் கார்த்திகைப் பூக்களுக்காக...................13.11.2014)