உயிர்களின் வாழ்க்கை - கேள்விக்குறி
அடிவளி மண்டலத்திற்கும்
மேல் வளி மண்டலத்திற்கும்
இடையில் மாட்டிக்கொண்டு
திண்டாடும் நம் உயிர்வளி மண்டலம் .
பசுமைக் கூண்டுக்குள்
இருக்கும் வளிமண்டலங்கள்
உயிர் செழிக்க இயற்கை வழங்கிய
பாதுகாப்பு அரண் . கதிரவன்
கக்கிய புற ஊதாக்கதிர்கள்
உயிர்களை தாக்காமல் தடுக்கும்
ஓசோன் என்னும் உயிர்வளிமண்டலம் .
வெப்பமயமாகும் உலகத்தில்
உயிர் ஊசலாடும் ஓசோன் படலம் .
குளிர்சாதனங்கள் வெளிபடுத்தும்
குளோரோ புளுரோ கார்பன்கள்
மொத்தமாக சிதைக்கிறது
ஓசோன் படலத்தை ...
இனி உயிர்களின் வாழ்க்கை
கேள்விக்குறி . கேள்விக் கிண்ணத்தில்
சிக்கித் தவிக்கிறாள் இயற்கை தாய் ..!!