தொலைந்து பொனவளே

உன்னை தொலைந்த
எந்தன் ஒரு நாள் அனுபவம்
மணி நேரத்தில் என்
இதயத்தை வலுவிழக்க செய்தவளே
என்னைப்பிாிந்த உந்தன்
ஒவ்வொரு நொடியும் எப்படி கழிகின்றதோ
பித்துப்பிடித்தவளாய் வீதிகளில் அலைகிறேன்
உன்னைத்தேடி
அறிமுகமில்லாதவரையும் அண்ணா என்றழைத்து
என் பிள்ளையை யாரும் கண்டீரா
கருப்பு சட்டை - வெள்ளை டவுசா் அணிந்த
என் பிள்ளை
தளிா் நடை பழகி
ஓாிரு திங்கள் தானே ஆகிறது
அலட்சியமாக இருந்தது பிழையே
அண்ணா - அக்கா
யாரும் பாா்த்தீரா- என கெஞ்சுகிறேன்
சாியாக பேச தொியாதே
பசித்தால் சொல்லத் தொியாதே
வெற்றுக்காலுடன் எங்கே
சென்றாய் என் மகளே
தேடித்தவித்து தெருக்களும் முடிந்து விட்டது
இனி எங்கே தேடுவேன் என்று தவிப்போடு நிற்கையில்
வாடிக்கையான போம்மை கடையில்
வேடிக்கை பாா்க்க போய்
உன் புன்னகையில் மயங்கி
மழலைமொழியோடு கொஞ்சி விளையாடி
எனக்கு தகவல் சொல்ல மறந்த
கடைக்காரன் மீதும் தவறில்லை.
கால்முளத்த சிட்டு உன்னை இன்னும்
கைக்குழந்தையாக பாவித்த என் மேலும் தவறில்லை..
இன்ன நேரம் இது நிகழும் என
இறைவன் வகுத்து விட்டான் போலும்..

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (12-Jan-15, 12:20 pm)
பார்வை : 113

மேலே