கூடா நட்பு

கூடா நட்பு***


கூடா நட்பு
கேடாய் முடிவது
நாளிதழ்களில் அடிக்கடி
நாம்படிக்கும் செய்தி


இருவரின் தொடர்பால்
வருகின்ற நட்பில்
எவரின் ஒழுக்கத்தை
பிழையென்று சொல்வது?

ஒருவர் ஒழுக்கம்
உள்ளவர் எனினும்
அவ்வித நட்பு
முளைத்திட வழியில்லை.

காமம் வெறியாய்
மாறிடும் போது
இருவரின் ஒருநிலை
கூடா நட்பு.


** கள்ளக் காதல்” என்ற சொற்றோடருக்கு மாற்றாகத் தான் “தி இந்து” நாளிதழ் நாகரிமாக ‘கூடா நட்பு” என்று சொற்றொடரைப் பயன்படுத்துகிறது.

எழுதியவர் : மலர் (12-Jan-15, 12:05 pm)
Tanglish : kuutaa natpu
பார்வை : 133

மேலே