இப்படி நாம் காதலிப்போம்- பொங்கல் கவிதைப் போட்டி-2015

அன்போடிருத்தல் சிரமமாகிப் போன உலகில்
ப்ரியம்,கருணை என்கிற வார்த்தைகளும்
வழக்கொழிந்து போகும் நிலையை எட்டியிருந்தன..

ஆட்சேபனைகளுள்ள ஒரு உரையாடலின் சுவாரஸ்யம்
முற்றாக தொலைக்கப்பட்ட கணத்தில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகை பிய்த்தெறிவதென்பது
எளிதாக கைவந்திருந்தது...

எதிர்ப்பதத்தை ஒரு தீர்வின் தற்காலிக நன்மையென
அந்த வயலுக்கு இயற்கை உரம் தவிர்த்து
செயற்கை பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது...

அப்படித்தான் கடைசிவரை ஆசிர்வதிக்கப்படாமலேயே
ஒரு பறவை கொலை செய்யப்பட்டது..

ஒருவனின் ஆற்றாமையை போக்க
சிலரது இலகுச் சொற்கள் போதும் என்கிற நிலையில்
அந்த நேரத்தில் அந்த சிலருக்கு
வேறு வேலை இருந்துவிடுகிறது...

அவரவர்க்கான பாதைகளின் வரையறைகளில்
பெரும்பாலும் பொது நலம் கொண்டு நிரப்புதலுக்கு
வழியில்லை என பிரகடனப்படுத்தப்பட்டது...

இத்தனைக்குப் பிறகு
நான் இருக்கப் போகின்ற இயல்புக்கு முன்னதாக
அன்போடிருத்தலின் ஒரு பகுதியாக
முதலில் ஒரு மரத்தை
நட்டுவிட்டு வந்துவிடுகிறேன் நான்...!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*** ( இயற்கையையும் சக மனிதனையும் காதலிப்போம் ) ***
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புகைப்படம் : நண்பர் அனாமிகா..
இக்கவிதை என்னால் இயற்றப்பட்டது என உறுதியளிக்கிறேன்...

பெயர் : ஆனந்த்
வயது : 23
அழைப்பு எண் : 9600725969
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : ஆனந்த் (13-Jan-15, 11:34 am)
பார்வை : 104

மேலே