ஒரு மலரின் குரல்

எழுத்து..காம் ..கவி பெருமக்களுக்கு வணக்கம்........ தற்பொழுதும் தங்களின் பார்வைக்கு ஒரு சூழ்நிலை கவிதையினை வைக்கின்றேன்..........
என்னுடன் பணிபுரியும் திரு. யுவராஜ் அவர்களுக்காக நம் சுதந்திர தின விழாவிற்காக ஒரு பள்ளி மாணவனுக்கு """"மலரின் சிறப்பினை""""" விளக்கும் வகையில் இயற்றிய வரிகள் இதோ.........

என்னை கொஞ்சம் பாருங்க.......
என் கதையை கேளுங்க............
(இது மலரின் குரல்..)

அதிகாலை மலர்ந்து ....மணம் பரப்பி .....
மாலையில் மடியும் எனக்கு மண்ணும், மரமும் மாதா பிதா....
சுழலும் காற்றும்.. சூரிய ஒளியும் எந்தன் சுவாசம்...
தேனீக்களுக்கு நானே தேனீர் விடுதி ..... எம்மிடம்
மங்கையரை மகிழ வைக்கும் மனமும் உண்டு..அதில்
மலையளவு மணமும் உண்டு...உடன்
மனிதகுல வளர்ச்சிக்கு மருத்துவக்குணமும் உண்டு....அதனால்
நேருவின் நெஞ்சினில் எனக்கு இடமும் உண்டு...
யாகத்திற்கும் வருவேன் ....சோகத்திற்கும் வருவேன் ..தியாகமாய்
என்றும் மனித வாழ்வை தொடர்ந்த படி........
என்னை கொஞ்சம் பாருங்க ......
என் கதையை கேளுங்க.....
என்னை போல வாழுங்க..........

எழுதியவர் : கவிஞா.நா.பிரகாஷ் (13-Jan-15, 7:16 pm)
Tanglish : oru malarin kural
பார்வை : 162

மேலே