இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015
கிராமத்து திண்ணையொன்றில் - அதை
கிராமமாகவே இருப்பு வைக்க
வெற்றிலை பாக்குடன்
சொலவடைகளையும் குதப்பி துப்புகிறாள்
சுந்தரத் தமிழ்க் கிழவி - அந்த
பழமையைக் காதலிப்போம்!
கூர் மண்ணைக் கிழித்தும்
குழந்தை தாய்மடி சேர்வது போல்
மண் வாசம் நாசியேறி
மனமெல்லாம் நிறைந்திடுதாம் - அந்த
தாய்மையை அனுபவிக்க
கோவணம் மடித்துக் கிளம்பி விட்டான்
கூன் விழுந்த கிழவன் - அவன்போல்
உழவைக் காதலிப்போம்!
புறாக்களுக்கு இறகு முளைத்து
நாளாகிவிட்டதாம் - அதில்
மை தொட்டெழுத
புதுக் கவி கேட்டது - நானுமென்னை
பாரதி என்றெண்ணி
பாடலொன்றை எழுதி விட்டேன்
காகிதங்கள் காரி உமிழ்ந்ததை
யாரிடமும் சொல்ல வேண்டாம்
நம்மை நாம் காதலிப்போம்!
இப்படி நாம் வாழ்க்கையைக் காதலிப்போம்
இப் படைப்பு என்னுடையது என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர் ; இ.செல்வக்குமார்
வசிப்பிடம் ; சென்னை
விலாசம் ; Plot no-25A , Subasri nagar
Mugalivakkam
Chennai - 600125
கைபேசி எண் ;9994144925
வயது ; 26