இப்படி நாம் காதலிப்போம்

அன்னலும் நோக்கினால்,
அடியாளும் நோக்கினால் காதலல்ல!
மணிக்கணக்காய்
உரையாடுவது காதலாமோ ?
மவுனம் கூட காதலில் பேசும்!
ஊர் சுற்றினால் காதலாமோ ?
தேவையில்லை.
உள்ளங்கள் ஒன்றுபட்டால்
தொலைவுகள் தொலைந்துவிடும்!
பரிசுகள் தந்தால் காதலோ?
பரிவுகள் தந்தால் மட்டுமே காதல்!
தொடுதல் காதலாமோ ?
இதயங்களின் இயக்கம்
ஒரு பாதையில் சென்றால்
இதுவும் தேவையில்லை!
அந்தஸ்து தீர்மானிக்குமோ ?
சாதி,மதம்,அந்தஸ்து
இந்த அதிகாரங்கள்
நுழையும் மனத்தில்
காதல் வாசம் செய்வதில்லை!
எதிர்ப்பார்ப்புகள்,சுயநலங்கள்
தாண்டிய உணர்வே காதல்!
முடிந்தால் இவற்றைக் கடந்து
காதலிப்போம்!சாத்தியமா ?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Jan-15, 5:03 pm)
பார்வை : 74

மேலே