நகை சுவை

டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?
மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.
#####
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
#####
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
‪#‎செத்தான்டா_சேகரு‬
#####
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?
#####
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
####
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்I

எழுதியவர் : முரளிதரன் (13-Jan-15, 6:11 pm)
Tanglish : nakai suvai
பார்வை : 618

மேலே