பிப் 14
காதலர் தின சிந்தனை சிதறல்கள்....!!!
(கவிதை கிடைக்காமல் காதலித்துக் கொண்டிருப்பவர்களின் உபயோகத்திற்க்காக......)
அன்பே,
நீ அணைக்காமல் சென்றதை ....
தீ அணைப்புத்துறைக்கு சொல்லிவிடு..?!
.....உடலெங்கும் பற்றி எரிகிறது....!!
ஆருயிரே,
வரும் கோடையில்...
வெப்பத்தின் அளவு....
உச்சத்தை தொடுமாம்....?!
உன் அப்பனை உடனே
ஊருக்கு அனுப்பு.....
ஒதுங்கிக்கொள்ள உன் நிழல் வேண்டும்....?!!
கண்ணே உஷாராக இரு,
நாம் காதலிப்பது..
உன் அப்பனுக்கு
தெரிந்துவிட்டது போல....!
புதிதாக கட்டிக்கொண்டிருக்கும்
வீட்டிற்கு....
தெருவை நோக்கி ஜன்னல்
வைக்காமல் கட்டுகிறான்....!!
அன்பே,
எனக்கு ஊட்டி, கொடைக்கானல்...
சிம்லா...டார்ஜிலிங்...எல்லாம்
எப்படியிருக்கும் என்று தெரியாது....?!
ஆனால்....
அத்தனையும் அனுபவிக்கிறேன்....
உன் அருகாமையில்....!!!
என்னுயிரே,
உன்னிடம் எனக்கு பிடித்ததெல்லாம்
என்ன தெரியுமா....?!...
அன்பான பார்வை....
அதிராத பேச்சு...
அழகான நடை...உன்
அப்பனின் பேங்க் பேலன்ஸ்.....?!!
கண்ணே தெரியுமா,
ஆய கலைகள் 64 .....
ஒரு மணி நேரத்திற்கு
எட்டு என்று வைத்தால்
எட்டு மணி நேரம்...!
என்ன....கணக்கு சரிதானே...?!
ஆமாம்...!
எட்டு மணிநேர மின்வெட்டு...மீண்டும்
அறிவிக்கப்பட்டுள்ளதாமே....?!!
உயிரே,
உடுத்திய துணியோடு
உடனே புறப்பட்டு வா...இனி....
எதற்கும் கவலைப்பட வேண்டாம்...
உன் அப்பனின் "நெட் பேங்கிங்
டிரான்சாக்ஷன் பாஸ்வோர்ட்"...
எனக்கு தெரிந்துவிட்டது....!!!
......இன்னும் வரும்.....!!!!!!!!!!!!!!!!